பங்குனி உத்திரம்... ஏப்.11 உள்ளூர் விடுமுறை அறிவிக்க பக்தர்கள் கோரிக்கை!

ஏப்ரல் 11ம் தேதி, பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏப்ரல் மாதம் 11ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள இந்துக்களால் பங்குனி உத்திரத் திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் தென் மாவட்டங்களில் இந்துக்கள் அனைவரும் தங்களது குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம்.
இதற்காக ஆண்டுதோறும் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதே போல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மக்களும் குலதெய்வ கோவிலுக்கு சென்று சுவாமி வழிபாடு செய்வதற்கு வசதியாக வரும் ஏப்ரல் 11ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என பக்தர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!