பங்குனி உத்திரம்... பழனியில் 4 நாட்களுக்கு தங்கத்தேர் புறப்பாடு ரத்து!

 
பழனி

திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி மலை முருகன் கோவிலில், பங்குனி உத்திர திருவிழாவினை முன்னிட்டு வரும் ஏப்ரல் 13ம் தேதி வரையில் 4 நாட்களுக்கு தங்கத்தேர் புறப்பாடு ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

தங்கத்தேர்

இது குறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பழனி மலை முருகன் கோவிலில் ஏப்ரல் 10ம் தேதி முதல் 4 நாட்களுக்கு தங்கத்தேர் புறப்பாடு ரத்து செய்யப்படுகிறது.

பழனி முருகன் கோவிலுக்கு சாதாரண நாட்களில் ஆயிரக்கணக்கிலும், திருவிழா காலங்களில் லட்சக்கணக்கிலும் பக்தர்கள் வருகை தருவது வழக்கமாக இருந்து வருகிறது. 

பழனி

இன்று அதிகாலை முதலே பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கில் பக்தர்கள் பழனியில் குவிந்து வருகின்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்படுவதால் தங்கத்தேர் புறப்பாடு 4 நாட்களுக்கு நடைபெறாது எனக் கூறப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web