அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா... ஏப்.2ல் கொடியேற்றம்!

 
அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா... ஏப்.2ல் கொடியேற்றம்!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள மேல புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா வருகிற ஏப்.2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் உள்ள அம்மன்புரம் மேல புதுக்குடி கிராம எட்டு பங்கு இந்து நாடார் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்டஅருள்மிகு அருஞ்சுனைகாத்த அய்யனார் திருக்கோவிலில் ஆண்டு தூரம் பங்குனி மாதம் வெகு விமர்சையாக நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழா வருகிற ஏப்ரல் மாதம் 2ம் தேதி தொடங்கி 11ம் தேதி வரை 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு 2ம் தேதி அதிகாலை 4. 15 மணிக்கு மேல் 5 மணிக்குள் மகா கணபதி ஹோமமும் காலை 5 மணிமேல் 6 மணிக்குள் திருக்கொடி ஏற்றமும் சிறப்பு அலங்கார தீபாரணையும் நடைபெறுகிறது அதன் பின்பு தினசரி மதியம் 12 மணிக்கு அருஞ்சுணை காத்த அய்யனாருக்கு புஷ்ப அலங்கார உச்சிக்கால சிறப்பு பூஜை நடைபெறுகிறது. 

தூத்துக்குடி

திருவிழாவில் 6வது நாள் நிகழ்ச்சியாக 7ம் தேதி திங்கள் கிழமை காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம் பகல் 12 மணிக்கு விசேஷ அலங்கார தீபாரணையும் அதைத் தொடர்ந்து மகா அன்னதானமும் நடைபெறுகிறது. 

பங்குனி உத்திர திருவிழாவான 10ம் நாள் 11ம் தேதி வெள்ளிக்கிழமை காலை7.30 மணிக்கு மகா கணபதி ஹோமம் சாஸ்தா மூல மந்திர ஹோமம் பூர்ணாதி தீப ஆராதனையும் காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம் 9.30 மணிமுதல் 10.30 மணிக்குள் பங்குனி உத்திர கும்பாபிஷேகம் நடைபெறுகிறது அதன் பின் 12 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாரணையும் மதியம் 2 மணிக்கு மேல் அருஞ்சுனை காத்த அய்யனாருக்கு உபய நிமித்தங்கள் செலுத்தி அய்யனாரை வழிபடுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது 

இதில் தூத்துக்குடி சிவகாசி விருதுநகர் சாத்தூர் உள்பட தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து அருஞ்சுனை காத்த அய்யனாரை வழிபடுவார்கள். இரவு 12 மணிக்கு மேல் புஷ்ப அலங்காரத்தில் அய்யனாருக்கு மகா சிறப்பு அலங்கார தீபஆராதனை ஆகி இரவு ஒரு மணிக்கு உற்சவ அய்யனார் கற்பக சப்பரத்தில் எழுந்தருளி மேல புதுக்குடி கிராம வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

திருவிழா 10 நாட்களும் இரவு 8 மணிக்கு இன்னிசை கச்சேரி பட்டிமன்றம் சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web