நாடு முழுவதும் அதிகரிக்கும் பீதி.. ராஜஸ்தான் முதல்வருக்கு கொரோனா பாதிப்பு உறுதி !

 
வசுந்தராஜே சிந்தியா

நாடு முழுவதும் கொரோனா (கொரோனா வைரஸ்) பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரே நாளில் புதிதாக 4,435 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தொற்று பாதித்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 23,091 -ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் சற்று பீதியடைந்து உள்ளனர். மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி உள்ளனர்.

வசுந்தராஜே சிந்தியா

இந்த நிலையில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அசோக் கெலாட் தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

அதில், நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. லேசான அறிகுறிகளுடன் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் அறிவுறுத்தலின் படி, அடுத்த சில நாட்களுக்கு வீட்டில் இருந்தே பணிகளை தொடர உள்ளேன். அனைவரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும், எனக் குறிப்பிட்டு உள்ளார்.

வசுந்தராஜே சிந்தியா

இதே போல் ராஜஸ்தான் முன்னாள் முதல்வரும், பாஜகவை சேர்ந்தவருமான வசுந்தராஜே சிந்தியாவிற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக கூறினார். அவர் கடந்த சில நாட்களில் தன்னை சந்தித்தவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web