ஏ.ஐ. வீடியோவால் பீதி... ஆம்புலன்ஸ் கதவு திறந்து நோயாளி விழுந்ததாக பரவும் காட்சி!

 
ஆம்புலன்ஸ்

சாலையில் உயிர்களை காக்க பாய்ந்து வரும் ஆம்புலன்ஸ் எப்போதும் பொன்னான நேரத்தை  பாதுகாக்கும் காவலர் போல செயல்படுகிறது. இதனால் ஆம்புலன்ஸ் சைரன் கேட்டாலே வாகனங்கள் விலகிச் செல்லும் மரபு நிலவுகிறது. இப்படிப்பட்ட சூழலில், சமூக வலைத்தளத்தில் வைரலாகிய ஒரு வீடியோ பெரும் பீதியை ஏற்படுத்தியது.

அந்த வீடியோவில், ஒரு ஆம்புலன்ஸ் சாலையில் சென்று கொண்டிருக்க, அதன் பின்புறக் கதவு தானாகத் திறக்கிறது. அதே நேரத்தில், உள்ளிருந்த நோயாளி ஸ்ட்ரெச்சருடன் சாலையில் விழுந்துவிடும் காட்சி உள்ளது. இதை கோவை அவினாசி சாலையில் நடந்தது என்றும், “தமிழகத்தில் புதிய திட்டம், இதை பார்த்து யாரும் குறை சொல்ல முடியாது” எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. பலர் அந்த வீடியோவை உண்மை என நம்பி பரப்பத் தொடங்கினர்.

ஆனால் போலீஸ் மற்றும் அதிகாரிகள் வெளியிட்ட தகவல்படி, இந்த வீடியோ முழுக்க முழுக்க போலி! அது எந்தவொரு இடத்திலும் நடந்த சம்பவமல்ல; ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. வீடியோவில் காட்டப்பட்ட இடமும் கோவை அவினாசி சாலையே அல்ல எனவும் அதிகாரப்பூர்வமாகத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலர்களும், “இப்படி ஏ.ஐ. தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி மக்கள் மனதில் பயம் கிளப்பும் போலியான வீடியோக்களை உருவாக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளனர். பொதுமக்கள் இத்தகைய காட்சிகளை உண்மை என நம்பாமல், அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல்களை மட்டுமே நம்பும்படி   போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!