பதறிய ஊழியர்கள்... விமானம் பறக்கும் போது கழன்று விழுந்த முன் சக்கரம்!

 
விமானம்

சமீபகாலமாக விமானப் பயணங்களில் பெரும் சவால்களும், சங்கடங்களும் தொடர்கதையாகி வருகின்றன. நேபாளத்தின் ஜனக்பூர் விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை 4.45 மணிக்கு  புத்தா ஏர்  விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.  விமானம் மேலே எழும்பி சென்றபோது, அதன் முன் சக்கரம் கழன்று கீழே விழுந்துவிட்டது.   

விமானிகள் அதை கவனிக்கவே இல்லை. பயணத்தில் அதற்கான அறிகுறி , அடையாளங்களும்  வெளிப்படுத்தவில்லை. இந்நிலையில்  திரிபுவனம் சர்வதேச விமான நிலையத்தில் அந்த விமானம் மாலை 5.10 மணிக்கு  பாதுகாப்பாக தரையிறங்கியது.  வழக்கம்போல் நடத்தப்பட்ட ஆய்வில்  விமானத்தில் முன் சக்கரம் இல்லாததை கண்டு   ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர் அவற்றை தேடும் பணி நடந்தது. இதில், ஜனக்பூர் விமான நிலையத்தின் ஓடுபாதை அருகே விமானம் திரும்பும் பகுதியில் முன் சக்கரம் கிடந்துள்ளது அதன்பிறகு தான் உறுதி செய்யப்பட்டது.  

அவற்றை ஊழியர்கள் கைப்பற்றி எடுத்து சென்றனர். விமானம், முன் சக்கரம் இன்றி 25 நிமிடங்கள் பறந்தபோதும் அது எதுவும் தெரியாமல் விமானிகளும், பயணிகளும் மற்றும் விமான ஊழியர்களும் இருந்துவிட்டனர்.  அதில் பயணித்த 62 பயணிகளும் பாதுகாப்பாக தரையிறங்கினர்.  இந்த விவரம் அவர்களுக்கு பயணத்தின்போது தெரியாமல் இருந்ததால் இந்த நிம்மதியான பயணம் நிகழ்ந்ததாக பயணிகள் கூறுகின்றனர்.  இச்சம்பவம் குறித்து அந்நாட்டு விமான போக்குவரத்து கழக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web