பதறிய பயணிகள்... ஊட்டி மலைப்பாதையில் 250 அடி பள்ளத்தில் பாய்ந்த வேன்..22 பேர் உயிர் தப்பினர்!

நினைச்சாலே நெஞ்செல்லாம் பதறுது. ஊட்டி மலைப்பாதையில் சென்றுக் கொண்டிருந்த வேன், சுமார் 250 அடி ஆழமுள்ள பள்ளத்தில் பாய்ந்ததில், வேனில் இருந்த 22 பயணிகளுக்கும் திக் திக் நிமிடங்கள் தான். அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை பகுதியில் இருந்து கூடலூரை அடுத்துள்ள மேல்கூடலூர் பகுதியில் திருமண நிச்சயதார்த்த விழாவில் கலந்துக் கொள்வதற்காக ஒரே குடும்பத்தை சேர்ந்த 22 பேர் தனியார் வேன் ஒன்றில் கூடலூர் நோக்கி வந்தனர்.
இந்நிலையில், நேற்று மாலை 3 மணியளவில் தவளை மலை கொண்டை ஊசி வளைவை கடந்து திரும்பிய போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன்து, சுமார் 250 அடி தூரம் உள்ள இடது பக்க பள்ளத்தில் பாய்ந்தது. தகவலறிந்து வந்த போலீசார், தீயணைப்புத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்தவர்களை கயிறு கட்டி மீட்டனர். இதில் வேன் ஓட்டுநருக்கு அதிக காயம் ஏற்பட்டது. மேலும் 3 பெண்களுக்கும் காயம் ஏற்பட்டது. பள்ளத்தில் பாய்ந்த வேன் மரத்தில் மோதி நின்றதால் அதிர்ஷ்டவசமாக 22 பேரும் உயிர் தப்பினர். இந்த விபத்து காரணமாக சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!