உஷார்... பாரசிட்டமால் உட்பட 211 மருந்துகள் தரமற்றவை... அதிர்ச்சி ரிப்போர்ட்!
மத்திய மற்றும் மாநில மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியங்கள் இணைந்து அக்டோபர் 2025 முழுவதும் நடத்திய திடீர் சோதனையில், இந்தியாவில் விற்பனை மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட மருந்துகளில் 211 மருந்துகள் தரமற்றவை என வெளிச்சம் பார்த்துள்ளது. கால்சியம், வைட்டமின் D3, பாக்டீரியா தொற்று மருந்துகள், புழு மருந்துகள், பொதுவாக வீடுகளிலேயே பயன்படுத்தப்படும் பாராசிட்டமால் மாத்திரைகள் கூட தரச் சோதனையில் தோல்வியடைந்தது கேள்விக்குறி எழுப்பியுள்ளது. அதிலும் 5 மருந்துகள் முற்றிலுமாக போலியானவை என கண்டறிதல் மருத்துவ உலகையே பதற வைத்துள்ளது.

கடந்த 3 மாதங்களாக தொடர்ச்சியாக வெளியாகும் தரக்குறைவான மருந்துகளின் பட்டியல் மருத்துவ துறையின் பாதுகாப்பு அமைப்பில் பெரிய கோணல் இருப்பதை சுட்டிக்காட்டுகிறது. ஜூலையில் 143, ஆகஸ்டில் 94, செப்டம்பரில் 112 மருந்துகள் தரமற்றதாக பதிவான நிலையில், தற்போது ஒரே மாதத்தில் 211 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டிருப்பது கவலை மிகுத்துள்ளது. இதன் முழு விவரங்களும் CDSCO அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

சில மாதங்களுக்கு முன்பு மத்தியப் பிரதேசத்தில் கோல்ட்ரிப் மருந்தை உட்கொண்டதால் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் இன்னும் நினைவில் இருந்து அழியாத நிலையில் மீண்டும் வெளிவந்த இந்த மருந்து பட்டியல் பொதுமக்களில் நம்பிக்கை சரிவை ஏற்படுத்தியுள்ளது. சந்தையில் இத்தகைய மருந்துகள் புழங்குவது பொதுச் சுகாதாரத்துக்கு நேரடி அச்சுறுத்தலாக இருப்பதால், பொது மக்கள் மருந்து வாங்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
