பரங்கிமலை–வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை திட்டமிட்டபடி தொடங்காது!
சென்னையில் பரங்கிமலை–வேளச்சேரி இடையேயான பறக்கும் ரயில் சேவையை தொடங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தண்டவாள பாதுகாப்பு சான்று இன்னும் கிடைக்காததால் ரயில் இயக்கம் தாமதமாகியுள்ளது. திட்டமிட்டபடி மார்ச் 10 முதல் ரயில் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சேவை தொடங்கும் என எதிர்பார்த்திருந்த பயணிகளுக்கு இதனால் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

வேளச்சேரி முதல் பரங்கிமலை வரை 4.5 கிலோமீட்டர் தூரத்திற்கு பறக்கும் ரயில் பாதையை நீட்டிக்கும் பணி 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆதம்பாக்கம்–பரங்கிமலை இடையே நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான வழக்குகள் காரணமாக பணிகள் நீண்ட காலம் நிறுத்தப்பட்டிருந்தன. பின்னர் 2022ஆம் ஆண்டு பிரச்சினைக்கு தீர்வு கிடைத்ததைத் தொடர்ந்து பணிகள் மீண்டும் தொடங்கி, தற்போது தூண்கள் மற்றும் தண்டவாளங்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

அண்மையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது. ரயிலை இயக்கியும், டிராலியில் பயணித்தும் தண்டவாளத்தின் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகள் பரிசோதிக்கப்பட்டன. அப்போது சில கூடுதல் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என குழுவினர் ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது. அந்த பணிகள் முடிந்த பிறகே இந்த பாதையில் ரயில் சேவை தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
