பறந்து போ... குழந்தைங்களோடு பெற்றோர்கள் சேர்ந்து பார்க்க வேண்டிய படம்... முழு விமர்சனம்

இயக்குநர் ராமின் பறந்து போ படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணின்னு ராமின் படங்களில் நமக்கு டேக் அவே நிச்சயமாக ஏதாவது ஒரு விஷயம் இருக்கும். சமூகத்தையும் நச்சுன்னு கேள்வி கேட்கற படங்களா இருக்கும். ஆனா, பறந்து போ ரிலீஸூக்கு முன்னாடி இருந்தே சொன்ன விஷயங்கள், இந்த படம் வழக்கமான ராமின் ஸ்டைல்ல இருந்து முற்றிலும் மாறுபட்ட கமர்ஷியல் படமா சிரிச்சுட்டே இருக்கலாம் என்பது தான். கூடவே இந்த ஜென்ரேஷன் பேரண்டிங்கும்!
மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி, மிதுல் உள்ளிட்டப் பலர் நடிச்சிருக்காங்க. கோகுல் (மிர்ச்சி சிவா), அவரது மனைவி கிரேஸ் ஆண்டனி இருவரும் வேலைக்கு செல்வதால், அவர்களுடைய மகன் அன்புவை (மிதுல் ரியான்) வெளியே அனுப்பாமல், எப்போதுமே வீட்டிலேயே அடைத்து வைக்கறாங்க. மற்ற குழந்தைங்க கூட அதிக பழக வாய்ப்பு கிடைக்காம வளர்கிறான் அன்பு.
பையனை பெரிய ஸ்கூல்ல படிக்க வைக்கறாங்க, அவனுக்கேத்த லைஃப் ஸ்டைல்ன்னு வரவை மீறின செலவு இருக்கறதால கடன் தொல்லைக்கு பயந்துட்டு சிவா ஊரை விட்டு வெளியே அன்பு கூட பைக்ல போறாரு. அப்பா- மகன் போகும் இந்த பைக் ட்ரிப் இவங்க வாழ்க்கையை எப்படி மாத்துது, இவங்க சந்திக்கற மனுஷங்கலாம் யாரு யாருங்கறது தான் ‘பறந்து போ’ படத்தின் கதை.
படத்தின் பெரிய ப்ளஸ் மிர்ச்சி சிவாவின் நடிப்பு தான். கதைக்காக மிர்ச்சி சிவாவா இல்ல மிர்ச்சி சிவாவுக்காக இந்த கேரக்டரான்னு கேட்கற அளவுக்கு கதையோட அவ்வளவு ஜெல் ஆகி ஃபிரேம் டூ ஃபிரேம் நம்மளை சிரிக்க வைக்கறாரு மனுசன். இந்த கேரக்டர இவரை தவிர வேற யாரும் ரீப்ளேஸ் பண்ண முடியாது அப்படின்னு சொல்ற அளவுக்கு அந்த கேரக்டருக்கு ஜஸ்டிஃபிகேஷன் கொடுத்து இருக்காரு.
அதே போல அந்த குட்டி பையன் மிதுல், சிவாக்கு ஈக்குவலா கவுண்டர் கொடுக்கிறதாகட்டும், துருதுருன்னு இருக்கிறது அப்படின்னு சொல்லிட்டு லைவ்லியா நடிச்சிருக்கான். நம்ம வீட்ல ஒரு குழந்தை அடம் பண்ணினா எப்படி நமக்கு கோவம் வருமோ, பாசம் காட்டுவோமோ அதே ஃபீலிங்க்ஸ் தான் இந்த பையனுடைய பர்ஃபாமென்ஸ் பார்க்கும்போது நமக்கும் தோணுது.
இந்த வருஷம் நடிச்சிருக்கற குழந்தை நட்சத்திரங்களை மிதுல்க்கு பெஸ்ட் சைல்ட் ஆர்ட்டிஸ்ட் அவார்ட் கொடுக்கலாம். அதே போல கிரேஸ் ஆன்டனி ஒரு கேரக்டர் இருக்கும் பியூட்டிஃபுல்லான ரைட்டிங் கொடுத்து இருக்காங்க. படத்துல வரும் சின்ன சின்ன கேரக்டர்ஸ்ஸான அஞ்சலி, குட்டி பையனோட பிரண்ட், அவங்க பேரண்ட்ஸ், எம்பரர்னு இந்த கேரக்டர்ஸூமே இண்ட்ரஸ்டிங்கா இருக்கு.
படத்துல மைனஸ் பகுதிகளைச் சொல்வதானால், கிட்டத்தட்ட 19 பாடல்கள் இருக்கு. அந்த பாடல்கள் எழுதப்பட்ட விதமும் ரொம்பவே ரசிக்கும் படியா இருக்கு. ஆனா இந்த 19 பாடல்களை எப்படி பிளேஸ் பண்ணிருக்காங்க அப்படின்னா, ஒரு வசனம் அடுத்து பாட்டு ஒரு சீன், வசனம், பாட்டு, சீன் இந்த ஆர்டர்ல ரிப்பீட் மோட்ல போகுது. ஆரம்பத்துல இந்த ஃபார்மட் ரசிக்கும்படியா இருந்தாலும் ஒரு கட்டத்துல ரசிகர்களுக்கு எரிச்சலாகிறது. அதே போல குட்டி பையன் - சிவாவுக்கு இடையிலான கான்வர்சேஷன் பல இடங்களில் ரசிக்கும்படியா இருந்தாலும், ஒரு சில சேட்டைகள் எல்லாம் பயங்கர கோவம் வருது. முன்ன பின்ன தெரியாத இடத்துல குட்டி பையன் காணாம போகும் போது பார்க்கற நமக்கு பதற்றமாகுது. ஆனா மிர்ச்சி சிவாவும் கிரேஸ் ஆண்டனியும் பல இடங்களில் அந்த டென்ஷனே இல்லாம கூல் கய்ஸ்ஸா இருக்கறது நம்பும் படியா இல்லை.
மற்றபடி பறந்து போ படம் குழந்தைங்களுடைய உலகத்தையும் அவங்க எதிர்பார்க்கற பேரண்டிங்ஸ், நாம மறந்து போன பல விஷயங்களையும் அட்வைஸ்ஸா இல்லாம, பல காட்சிகளில் கடத்தி இருக்காங்க. மனசு விட்டு சிரிக்கற மாதிரியான லாஃபிங்க் மொமண்ட்ஸூம் படத்துல நிறைய இருக்கு. கண்டிப்பா குழந்தைங்க, பேமிலியோட படத்தை தியேட்டர்ல பார்க்கலாம்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!