'பராசக்தி' ஒண்ணும் ஆவணப்படம் கிடையாது... திரைப்படம் அரசியல் மாற்றத்தைத் தராது!" - கார்த்தி சிதம்பரம்!
திருப்பூர் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகக் கோவை வந்திருந்த காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், செய்தியாளர்களைச் சந்தித்தபோது தற்போதைய அரசியல் சூழல்கள் குறித்துக் காரமான கருத்துகளை முன்வைத்தார்.
தமிழக அரசியலில் 'பராசக்தி' போன்ற திரைப்படங்கள் ஏற்படுத்திய புரட்சி குறித்துப் பேசப்படுகையில், கார்த்தி சிதம்பரம் அதனை மறுத்துப் பேசினார். "திரைப்படங்கள் வாயிலாகத் தமிழக அரசியலை நிர்ணயிக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. 'பராசக்தி' ஒன்றும் ஆவணப்படம் அல்ல; அது ஒரு வெறும் பொழுதுபோக்குத் திரைப்படம் மட்டுமே. திரைப்படங்களால் எந்த அரசியல் மாற்றமும் நிகழ்ந்து விடாது."
"தெருநாய் தொல்லை, வேலையில்லாத் திண்டாட்டம், குப்பை மேலாண்மை போன்ற மக்கள் அன்றாடம் சந்திக்கும் உண்மையான பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதை விடுத்து, திரைப்படங்களைச் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை" என்றார்.

மத்திய அரசின் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தைக் கடுமையாகச் சாடினார் கார்த்தி சிதம்பரம். "இது நம் நாட்டின் அரசியல் சாசனத்திற்கும் ஜனநாயகத்திற்கும் எதிரானது. ஜனாதிபதி ஆட்சி முறை இருக்கும் நாடுகளில் மட்டுமே இது சாத்தியம்." "ஆண்டுக்கு ஐந்து அல்லது ஆறு தேர்தல்கள் நடப்பதுதான் ஜனநாயகத்திற்கு நல்லது. அடிக்கடி தேர்தல் வரும்போதுதான் அரசியல் கட்சிகள் மெத்தனமின்றிச் செயல்படும். மாநிலத் தேர்தல்கள் மூலமாகவே மக்கள் மத்திய அரசுக்குப் பாடம் புகட்ட முடியும்."
தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் வருகை மற்றும் 'ஆட்சியில் பங்கு' குறித்த கேள்விக்கு அவர் "நடிகர் விஜய்க்குப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது, அதனால் கூட்டம் கூடுகிறது. ஆனால், ரசிகர்களின் ஆதரவு என்பது வேறு, அது வாக்குகளாகவும் இடங்களாகவும் மாறுவது என்பது வேறு." "1967 முதல் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இல்லை என்பது உண்மைதான். அதிகாரத்தில் பங்கு கேட்பது என்பது எதார்த்தமான ஒன்றுதான். தேர்தல் நேரத்தில் கூட்டணிக் கட்சிகளின் நிலைப்பாடு குறித்துத் தெரியவரும்."
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
