சென்சார் சிக்கலில் ‘பராசக்தி’… வெளியீடு தள்ளிவைப்பு!
நாளை மறுநாள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த ‘பராசக்தி’ படத்திற்கு இதுவரை சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை. இதனால் படம் வெளியாகுமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. வெளியீட்டு தேதியை நெருங்கியும் சான்றிதழ் கிடைக்காதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், நெதர்லாந்து விநியோக நிறுவனம் ஜனவரி 10ஆம் தேதி படம் வெளியாகாது என அறிவித்துள்ளது. படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து 10ஆம் தேதிக்கான அனைத்து காட்சிகளையும் ரத்து செய்ய அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் வெளிநாடுகளில் முன்பதிவு செய்யப்பட்ட காட்சிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.
ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு, 10 நாட்களுக்குள் கட்டணம் திருப்பி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்சார் சான்றிதழ் கிடைத்த பின்னர் புதிய வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
