பராசக்தி படத்துக்கு ரஜினிகாந்த் பாராட்டு... சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

 
பராசக்தி
 

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘பராசக்தி’ திரைப்படம் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. சுதா கொங்கரா இயக்கியுள்ள இப்படத்தில் ரவி மோகன் எதிர்மறை வேடத்தில் நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம், அவரின் 100வது திரைப்படமாகும்.

பராசக்தி

1959ஆம் ஆண்டு இந்தி திணிப்புக்கு எதிரான மாணவர் போராட்டத்தை மையமாக கொண்டு உருவான இப்படம், கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் மொழி உணர்வை பேசுவதற்காக பாராட்டப்பட்டுள்ளது. படம் வெளியான 2 நாட்களில் ரூ.51 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. சென்னையில் நடந்த நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில், இது வாழ்நாள் பெருமை அளித்த படம் என சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.

பராசக்தி

இந்நிலையில், ‘பராசக்தி’ படத்தை பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த வாழ்த்துக்காக சிவகார்த்திகேயன் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார். ரஜினியின் பாராட்டு தனக்கு மிகுந்த உற்சாகம் அளித்ததாகவும் அவர் கூறினார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!