வியாபாரத்திற்காக வரலாற மாத்திட்டீங்களே, நியாயமா? பராசக்தி படத்தை கிழித்து தொங்க விட்ட பெண்... சர்ச்சை வீடியோ!

 
பராசக்தி
 

இன்று வெளியாகவிருக்கும் ‘பராசக்தி’ திரைப்படத்தை குறித்து பெண் ஒருவர் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பிய வீடியோ வைரலாகி வருகிறது. இந்தி திணிப்புக்கு எதிராக தீவிரமாக போராடிய மண் தமிழகம் என்றும், அந்த வரலாற்றை அடிப்படையாக வைத்து தான் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆனால், அதே படத்தை தெலுங்கில் வெளியிடும் போது, “தமிழ் வாழ்க” என்பதற்கு பதிலாக “தெலுங்கு வாழ்க” என மாற்றப்பட்டிருப்பது ஏன் என்று அவர் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். வரலாற்றையும் மொழி உணர்வையும் பேசும் படத்தில், வியாபாரத்திற்காக இப்படியான மாற்றம் செய்வது தவறு என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

பராசக்தி

தமிழ் மொழிக்காக நடந்த போராட்டத்தை வைத்து படம் எடுத்துவிட்டு, மற்ற மாநிலங்களில் வெளியிடும்போது உணர்வுகளை மாற்றுவது நியாயமா என்ற அவரது கேள்வி தற்போது இணையத்தில் விவாதமாகி உள்ளது. இந்த வீடியோக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் குவிவதால், ‘பராசக்தி’ திரைப்படத்தை சுற்றி புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!