24 மணி நேரத்தில் 4 கோடி… ஜனநாயகனை வீழ்த்திய ‘பராசக்தி’ ட்ரெய்லர் !

 
பராசக்தி

 

சமீபத்தில் வெளியான ‘பராசக்தி’ திரைப்படத்தின் ட்ரெய்லர், வெளியான 24 மணி நேரத்திலேயே 4 கோடி பார்வைகளைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. அரசியல் பின்னணியும், தீவிரமான வசனங்களும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதனால் சமூக வலைதளங்களில் ட்ரெய்லர் டிரெண்டிங்கில் முன்னிலை வகிக்கிறது.

இதற்கு மாறாக, ‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் ஆக உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ ட்ரெய்லர், 2 நாட்களில் 3.8 கோடி பார்வைகளை கடந்துள்ளது. இந்த ட்ரெய்லருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், பார்வை எண்ணிக்கையில் ‘பராசக்தி’ முன்னிலை பெற்றுள்ளது. இரு படங்களின் ட்ரெய்லர்களையும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஒப்பிட்டு விவாதித்து வருகின்றனர்.

விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படம் வரும் 9ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்னும் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் வெளியீட்டில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் முன்பதிவு தொடங்காத நிலையில், படம் திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!