பகீர்!! இன்ஸ்டாவால் விபரீதம்.!! சிறுமியை திருமணம் செய்து குடித்தனம் நடத்திய சிறுவன்!!

 
இன்ஸ்டா மாணவி

சென்னை தாம்பரம் அருகே 17வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில், சிறுமியை கடந்த 14ஆம் தேதியில் இருந்து காணவில்லை எனவும் கண்டுபிடித்து தரக்கோரியும் குன்றத்தூர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் விசாரணையில் இறங்கினர்.

இந்நிலையில், சிறுமி குன்றத்தூர் முருகன் கோயில் அருகில் தனது காதலன் சந்தோஷ்குமார் (19) என்பவருடன் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், 2 பேரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

சிறுமி

அதில், சிறுமி மற்றும் சந்தோஷ்குமார் ஆகியோர் கடந்த 3 மாதங்களுக்கு இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகியுள்ளனர். அதன்பிறகு காதலித்து நேரில் சந்தித்து காதலை வளர்த்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை முதல் முதலாக நேரில் சந்தித்து பேசி, உடனே‌ பல்லாவரம் பிரதான சாலையில் பம்மல் பகுதியில் உள்ள புத்துக் கோயிலில் திருமணம் செய்து கொண்டு, இரவு சந்தோஷ்குமாரின் வீட்டில் தங்கி இருந்ததும் தெரியவந்தது.

இன்ஸ்டா

இந்த இளசுகள் முதல் சந்திப்பிலேயே திருமணம் வரை சென்றது போலீசார், பெற்றோர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதனைதொடர்ந்து இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ், தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web