பெற்றோர்களே உஷார்!! ஒரே நாளில் 7 குழந்தைகள் உயிரிழப்பு!! தீயாய் பரவும் அடினோ வைரஸ்!!

 
அடினோ வைரஸ்

கடந்த 2 ஆண்டுகளாக உலகம் முழுவதும் கொரோனா மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.இதனை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் உலக நாடுகள் மேற்கொண்டன. அத்துடன் தடுப்பூசி மூலமும் அதற்கு தீர்வு காணப்பட்டது. தற்போது தான் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில், சுவாசக் கோளாறு காரணமாக 7 குழந்தைகள் உயிரிழந்து இருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது.

அடினோ வைரஸ்

 இது குறித்து மாநில அரசு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த சில நாட்களாக குழந்தைகள் பலரும் அடினோ வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  இம்மாநிலத்தில் இதுவரை  12 உயிரிழப்புக்கள்  பதிவாகியுள்ளன.ஆனால்  கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்களுக்கான காரணம் அடினோவைரஸ் எனக் குறிப்பிடவில்லை.

அடினோ வைரஸ்

இதற்குப் பதிலாக, கடுமையான சுவாச நோய் தொற்றுகளாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், தற்போது வைரஸ் தொற்றுநோய்க்கான எந்த ஆதாரமும் இல்லை என அம்மாநில சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இருந்த போதிலும் ஒரே நாளில் 7 குழந்தைகள் ஒரே பகுதியில் உயிரிழந்து இருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web