பெற்றோர்களே உஷார்!! பள்ளியில் சேர்க்க வயது கட்டுப்பாடு!! அதிரடி உத்தரவு !!

 
ஒன்றாம் வகுப்பு

முன்பெல்லாம் 5 வயது நிரம்பிய பிறகு தான் பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்து படிக்க வைத்தனர். ஆனால் கல்வி சூழலில் 2 வயதில் ப்ளே ஸ்கூலில் தொடங்கி விடுகிறது. 3 வயதில் ப்ரி.கே.ஜி. 4 வயதில் எல்.கே.ஜி, 5 வயதில் யூ.கே.ஜி.  , 6 வயதில் முதல் வகுப்பு என படிக்கின்றனர். ஒன்றாம் வகுப்பிற்கு முன்பே 4 வருடங்கள் பள்ளியில் படிக்கும் நிலைமை. நடக்க தொடங்கியதும் பள்ளியில் சேர்த்து விடுகின்றனர்.

ஒன்றாம் வகுப்பு

பள்ளியில் தான் பேச்சே தொடங்குகிறது. இதனை நடைமுறைப்படுத்த மத்திய அரசு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி  3 வயதில் குழந்தைகளை  ப்ரிகேஜியில் சேர்க்கலாம். முதல் வகுப்பில் சேர்க்கும் போது 6 வயது முடிவடைய வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. இந்த முறையை கட்டாயமாக கடைப்பிடிக்கும் போது குழந்தைகளின் கல்வித்திறன் மேம்படும். அவர்களுக்கான அடிப்படை கற்றலும் அதிகரிக்கும் எனவும் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
தேசிய கல்விக் கொள்கை 2020ன் படி குழந்தைகளுக்கான அடிப்படை கல்வி சீரான முறையில் வலுவடைய வேண்டும்.

ஒன்றாம் வகுப்பு

 3 முதல் 8 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் 5  வருட கற்றல் வாய்ப்புகள் சரியான முறையில் கிடைக்க வேண்டும்.  இந்தக் கொள்கை மூலம் குழந்தைகளின் தடையற்ற கற்றல் மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது எனக் கூறப்பட்டுள்ளது.இந்த உத்தரவு இந்தியா முழுவதும் உள்ள அங்கன்வாடிகள் அல்லது அரசு மற்றும் அரசு உதவி பெறும், தனியார் மற்றும் அரசு சாரா முன்பள்ளி மையங்களில் படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும்  பொருந்தும். அத்துடன் அவர்களுக்கான தரமான கல்வியை மூன்றாண்டுகளுக்கு அணுகுவதை உறுதி செய்வதன் மூலம் மட்டுமே இதைச் செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web