பெற்றோர்களே உஷார்... 7 மாத குழந்தை பலூனை விழுங்கியதில் மூச்சுத்திணறலால் பலி!

 
குழந்தை பலூனை விழுங்கியதில் மூச்சுத்திணறலால் பலி குழந்தை பலூனை விழுங்கியதில் மூச்சுத்திணறலால் பலி

தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு  திருவோணம் தாலுகா ஊரணிபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் 36 வயது  சதீஷ்குமார்.  இவரது மனைவி 30 வயது சிவகாமி. 

சிறுவன் பலி

இவர்களது 7 மாத ஆண் குழந்தைக்கு நேற்றுமுன்தினம் திடீரென மிக கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக பெற்றோர் குழந்தையை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அதிர்ச்சியில் கதறி துடித்து குழந்தை உடலை சொந்த ஊருக்கு கொண்டு வந்தவர்கள், சந்தேகத்தின் பேரில் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு  கொண்டு சென்றனர். 

குழந்தை உயிரிழப்பு

குழந்தையை பிரேத பரிசோதனை செய்த போது குழந்தையின் வயிற்றில் பலூன் இருந்தது தெரியவந்தது. அதை அகற்றிய மருத்துவர்கள் குழந்தை  பலூனை விழுங்கியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக  தெரிவித்தனர். இதுகுறித்து   போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை பலுானை விழுங்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும்,  சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?