பெற்றோர்களே உஷார்... பள்ளிகளில் டேஞ்சரான டேர் கேம்... 40 மாணவர்கள் பிளேடால் கையை கீறிக்கொண்ட விபரீதம்...!

 
பெற்றோர்களே உஷார்... பள்ளிகளில் டேஞ்சரான டேர் கேம்... 40 மாணவர்கள்  பிளேடால் கையை கீறிக்கொண்ட விபரீதம்...!  

 
குஜராத் மாநிலத்தில் அம்ரேலி மாவட்டத்தில்  மாணவர்கள் ‘டேர் கேம்’ என்ற பெயரில் கையில் காயம் ஏற்படுத்திக் கொண்டனர். இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது குஜராத் மாநிலம், அம்ரேலி மாவட்டத்தில் உள்ள பாகஸாரா என்னும் பகுதியில் முதற்கல்வி பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.  

 

இந்நிலையில் 5 முதல் 7ம் வகுப்பு வரை சுமார் 40  மாணவர்கள்  இணைந்து ‘டேர் கேம்’   விளையாட்டை விளையாடினர். அது என்னவென்றால் பென்சில் ஷார்ப்னரில் உள்ள பிளேடு மூலம் தாங்களே தங்களது கையில் காயம் ஏற்படுத்தி கொள்ள வேண்டும், அதனை செய்ய முடியாதவர்களுக்கு  ரூ. 10 அபராதம்.  

 

இதனை மாணவர்கள் ஒருவருக்கொருவர் சவாலாக ஏற்றுக் கொண்டு செய்துள்ளனர்.  இது குறித்து ஒரு மாணவன் பெற்றோரிடம் கூறிய போது தான்  இந்த டேர் கேம் வெளிச்சத்திற்கு வந்தது. இதனைத் தொடர்ந்து பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகளிடம்   முறையிட்டனர். இதனால் நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறை அதிகாரிகள் இச்சம்பவத்தில் எந்த ஒரு குற்ற நோக்கமும் இல்லை   குற்றச் செயலின் சாட்சி கிடைத்தால் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  கூறியுள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web