பெற்றோர்களே உஷார்... ஆட்டோ ஓட்டுனர் சாலையில் தோழிகளுடன் நடந்து சென்ற இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை!

சென்னை, ஆழ்வார்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் இளம்பெண் ஒருவர். இவர் தனியார் ரெஸ்டாரென்டில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று பிற்பகலில் தனது தோழிகளுடன் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது, அங்குள்ள ஆட்டோ ஸ்டாண்டில் நின்றிருந்த ஆட்டோ ஓட்டுநர் அந்த இளம் பெண்ணை பின் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து, தனியார் ரெஸ்டாரெண்ட்டின் உரிமையாளர் அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டோ ஓட்டுநர் ஆழ்வார்பேட்டையில் வசித்து வரும் 21 வயது லிங்கேஸ்வரன் என்ற இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!