பெற்றோர்களே உஷார்... 3 வயது சிறுமியைக் கடத்தி சென்ற ஆட்டோ டிரைவர்!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இரயில் நிலையம் அருகே விளையாடிக் கொண்டிருந்த 3 வயதுச் சிறுமியைத் தூக்கிக் கொண்டு ஓடிய ஆட்டோ டிரைவர் ஒருவரை, நாகர்கோவில் போலீசார் தீவிர தேடலுக்குப் பிறகு மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பலூன் வியாபாரியான ரஞ்சன் என்பவரின் 3 வயது மகள் சாரா. கடந்த சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில், நாகர்கோவில் இரயில் நிலையம் முன் தாய் முஸ்கான் அருகில் சாரா விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த யோகேஷ் குமார் (32) என்ற ஆட்டோ டிரைவர் திடீரெனச் சிறுமியைத் தூக்கிக் கொண்டு இரயில் நிலையத்துக்குள் புகுந்து தப்பி ஓடிவிட்டார்.

இரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், சிறுமியைக் கடத்திச் சென்றவர் கோட்டார் பெரிய நாடார் தெருவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் யோகேஷ் குமார் என்பது உறுதி செய்யப்பட்டது. போலீசார் அவரைத் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், இரச்சகுளம் விஷ்ணுபுரம் காலனியில் உள்ள காட்டுப் பகுதியில் பதுங்கி இருந்த யோகேஷ் குமாரை மடக்கிப் பிடித்தனர். அப்போது தப்பி ஓட முயன்றதில் தவறி விழுந்த அவருக்குக் கால் முறிந்தது. கடத்தப்பட்ட சிறுமியும் அவர் ஓட்டி வந்த ஆட்டோவிலிருந்தே பத்திரமாக மீட்கப்பட்டார்.

போலீசாரின் விசாரணையில், யோகேஷ் குமார் மது போதையில் சிறுமியைக் கடத்திச் சென்றதாகக் கூறியுள்ளார். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனையில், சிறுமி எந்தவிதப் பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாகவில்லை என்பது தெரியவந்தது. இது தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கால் முறிந்த நிலையில் இருந்த யோகேஷ் குமாரைக் கைது செய்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
