பெற்றோர்களே உஷார்... FREE FIRE ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி வீட்டைவிட்டு வெளியேறிய சிறுவன்!

 
FREE FIRE ப்ரீ பயர்

ராஜஸ்தான் மாநிலம் பார்மெர் மாவட்டத்தில் வசித்து வருபவர் மோகன்லால் இவரது மகன் 17 வயது  ஓம்பிரகாஷ். இவர் ஃப்ரீ பயர் கேமிற்கு  அடிமையாகி தொடர்ந்து தனது செல்போனில் விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். இதனால் தனது படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு வீட்டிலேயே இருந்து கொண்டு தொடர்ந்து  விளையாடி வந்துள்ளார். இதனையடுத்து பெற்றோர் அந்த சிறுவனை ஈரோட்டில் தங்கியுள்ள உறவினர் நரேஷ் என்பரின் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஆன்லைன் ரம்மி

தொடர்ந்து விளையாடிக் கொண்டே இருந்ததால் அந்த சிறுவனின் செல்போனில் பழுது ஏற்பட்டது. சரிசெய்தால் விளையாடிக் கொண்டே இருப்பான் என நினைத்து அதனை  உறவினர் நரேஷ் சரிசெய்து கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால் அந்த சிறுவன் கோபித்துக்கொண்டு ஜனவரி  30ம் தேதி அதிகாலை வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.  இது குறித்து காவல்நிலையத்தில் ஓம்பிரகாஷ் காணவில்லை என புகார் அளித்துள்ளார்.  காவல்துறையினர் வீட்டிற்கு அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது அந்த சிறுவன் சங்ககிரி வரை நடந்தே சென்றது தெரியவந்துள்ளது.

ஆன்லைன்

இதைத் தொடர்ந்து பழுதான செல்போனை விற்பனை செய்து அதன்மூலம் கிடைத்த பணத்தை வைத்து பெங்களூருக்கு பேருந்திலும் அங்கிருந்து உத்திரபிரதேசத்திற்கு ரயிலிலும் சென்றுள்ளார். பின்னர், அங்குள்ள சாமியார் ஆசிரமத்தில் தங்கியிருந்தான். அதனை  கண்டறிந்து காவல்துறையினர் உதவியுடன் சிறுவனை மீட்டு ஈரோடு அழைத்து வந்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web