பெற்றோர்களே உஷார்... பல்சர் பைக் தலையில் விழுந்து 10ம் வகுப்பு மாணவன் பலி!

தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் பனச்சமூடு அருகே உள்ள வெள்ளச்சிப்பாறை -ஓடவள்ளி பகுதியில் வசித்து வருபவர் பைஜூ. இவர் ஆட்டோடிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் சுபின். களியல் அருகே உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.
சம்பவம் நடைபெற்ற நாளில் சுபின் பைக் ஓட்டி படிக்கும் ஆர்வத்தில் வீட்டில் இருந்த தந்தையின் பல்சர் பைக்கை ஓட்டி பார்க்க முயற்சி செய்தார். அப்போது திடீரென பைக் நிலை தடுமாறி பக்க சுவற்றில் மோதி கீழே விழுந்த சுபின் மீது பைக் விழுந்ததில் தலையில் படுகாயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு வெளியே வந்த சுபினின் தாயார் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நெய்யாற்றின்கரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு 10 நாட்களுக்கு மேலாக தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த சுபின், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!