பெற்றோர்களே உஷார்... யாரையுமே நம்பாதீங்க... 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த 70 வயது முதியவர்!

பெற்றோர்களே உஷாராக இருங்க. உங்கள் மகளின் பாதுகாப்பை ஒவ்வொரு நிமிடமும் உறுதிப்படுத்திக்கோங்க. யாரையுமே நம்பாதீங்க. அது உறவினராக இருந்தாலும், பக்கத்து வீட்டினராக இருந்தாலும், நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் உங்கள் மகளை எந்த வயதாக இருந்தாலும் தனியே நம்பி அனுப்பாதீங்க.
தமிழகம் முழுவதுமே சமீப காலங்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான பாலியல் குற்றங்களில் தெரிந்தவர்கள், நன்கு அறிமுகமானவர்களே குற்றவாளிகளாக உள்ளனர்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லைத் தந்ததாக 70 வயது முதியவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பீக்கிலிபட்டி நடுத்தெருவைச் சேர்ந்தவர் செல்லத்துரை (70). இவர் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமி அழுது கொண்டே தனது தாயாரிடம் கூறியுள்ளார். இது குறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், செல்லத்துரையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!