பெற்றோர்களே உஷார்... தாய் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மூத்த மகன் மருத்துவமனையில் இருந்து கடத்தல்!

தெலுங்கானா மாநிலத்தில் வசித்து வருபவர் பாக்கியலட்சுமி. அங்கு அமைந்துள்ள நல்கொண்டா அரசு மருத்துவமனையில் பாக்கியலட்சுமி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்த நேரத்தில் பாக்கியலட்சுமியின் மூத்த மகனை மருத்துவமனைக்கு நோயாளிகளை பார்ப்பது போல வந்த 2 பெண்கள் கடத்தி சென்றுள்ளனர்.
குழந்தை காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இருப்பினும் குழந்தையை கண்டுபிடிக்க முடியாததால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து சுமார் 7 மணி நேரத்தில் கடத்தப்பட்ட குழந்தையை பத்திரமாக மீட்டனர். பின்னர் குழந்தையை கடத்திய 2 பெண்களை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!