பெற்றோர்களே உஷார்... தின்னரை குடித்த ஒன்றரை வயது குழந்தை பலி

 
செங்கல்பட்டு
 

 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த தேவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமாரின் வீட்டில், பெயிண்ட் அடிப்பதற்காக வாங்கி வைத்திருந்த ‘தின்னர்’ திரவம் ஒரு குடும்பத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை பிறைமதி, தவறுதலாக அந்த திரவத்தை குடித்துவிட்டதாக கூறப்படுகிறது.

ஆம்புலன்ஸ்

இதையடுத்து வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில் குழந்தையை உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் உடல்நிலை மோசமடைந்ததால், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

குழந்தை உயிரிழப்பு

ஒரு வாரத்திற்கும் மேலாக அவசர சிகிச்சைப் பிரிவில் போராடிய பிறைமதி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறு கவனக் குறைவு ஒரு பிஞ்சு உயிரை பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!