கதறித் துடித்த பெற்றோர்... 5 வயது சிறுமி மகாமகக் குளத்தில் தவறி விழுந்து பலி!

 
காவியா

தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் மாதுளம் பேட்டை தெருவில் வசித்து வரும் சிறுமி காவ்யா. இவருடன்  4 சிறுவர் சிறுமியர்கள்  மகாமக குளக்கரையில் விளையாடி உள்ளனர்.

தஞ்சாவூர் தஞ்சை

அப்போது காவியா என்ற 5  வயது சிறுமி மகாமக குளக்கரையின் படியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது கால் வழுக்கி  குளத்தில் தவறி விழுந்துவிட்டார்.  இதனை கவனித்த மற்ற சிறுவர்கள் அக்கம் பக்கத்தில் தெரிவிக்கவே, தீயணைப்புப் படை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி குளத்தில் தவறி விழுந்த காவ்யாவின் உடலை மீட்டனர்.

காவியா

காவியா குளத்தில் மூழ்கி உயிரிழந்த தகவல் பரவியதும் குழந்தையின் தாய் மற்றும் உறவினர்கள் குழந்தையின் உடலை கட்டிப்பிடித்து கதறி அழுதனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ,  சோகத்தையும் ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?