கதறித்துடித்த பெற்றோர்... உன்னவிட்டு எப்படி இருப்போம்.? 11ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை!

கேரள மாநிலம் எர்ணாகுளம் வடக்கன்பரவூர் பகுதியில் வசித்து வருபவர் சுதாகரன் . இவரது மகன் அம்பாடி அதேபகுதியில் இருக்கும் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் மாணவனின் தாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சையில் இருந்து வந்தார். மாணவனின் தாயும், தந்தையும் எர்ணாகுளத்தில் இருக்கும் புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு சென்றிருந்தனர்.
அப்போது வீட்டில் தனியாக இருந்த மாணவன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.வீட்டிற்கு வந்த பெற்றோர் தங்களது மகன் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு கதறி அழுதனர்.தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மாணவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மாணவன் தனது தாயின் உடல்நலம் பற்றி நினைத்து வேதனையில் இருந்ததாகவும் இதனால் தற்கொலை முடிவு எடுத்திருக்கலாம் என தெரிகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!