காதலுக்கு பச்சைக்கொடி காட்டிய பெற்றோர்... காதலியுடன் சண்டையால் இளைஞர் தற்கொலை!
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே, எட்டு வருடங்களாக ஒரு பெண்ணைக் காதலித்து வந்த இளைஞர், காதல் தோல்வி காரணமாக, வாழ்க்கையில் எடுக்கவே கூடாத தவறான முடிவை எடுத்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த பிராமணமங்கலம் புதுமனைப் பகுதியைச் சேர்ந்தவர் கோபி கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் மோனிஷ்க்கு (29) ஓட்டுநர் வேலை செய்து வந்தார். இவர் பெங்களூருவில் உள்ள உறவினர் ஒருவரின் பெண்ணை சுமார் 8 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் பெற்றோர்களுக்குத் தெரிய வந்தவுடன், அவர்களே அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து வைக்கத் திட்டமிட்டனர்.

பெற்றோர் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்த நிலையிலும், மோனிஷுக்கும், காதலிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. காதல் தோல்வி என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஆழமான மன ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வலி மிகுந்த அனுபவம். இத்தகைய சூழலில் தவறான முடிவு எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
ஆனால், மோனிஷ் காதல் தோல்வியால் மனமுடைந்து, நேற்று மாலை பிராமணமங்கலத்தில் உள்ள தனக்குச் சொந்தமான மற்றொரு வீட்டிற்குச் சென்று வருவதாகக் கூறிவிட்டுச் சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால், பெற்றோர் அங்கு சென்று பார்த்தபோது, மோனிஷ் அறையில் தூக்கிட்ட நிலையில் இருந்தாராம். உடனடியாக அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் மோனிஷ் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

இது குறித்துத் தகவல் அறிந்த பள்ளிகொண்டா போலீசார், மோனிஷின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மோனிஷின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து, மோனிஷின் காதல் மற்றும் தற்கொலைக்கான சரியான காரணம் குறித்துப் பள்ளிகொண்டா போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
