பெற்றோர்களே கவனம்... குளிர்காலத்தில் குழந்தைகளை மார்புச் சளியிலிருந்து காக்க இதை தவிருங்க...!

 
குழந்தை
 

குளிர்காலம் வந்துவிட்டாலே குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் அதிகமாக தாக்கும். நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதால், சிறிய மாற்றமே குழந்தைகளை பாதிக்கக்கூடும். குறிப்பாக இந்த பருவத்தில் பல பெற்றோர்கள் எதிர்கொள்ளும் பெரிய பிரச்சனை தான் மார்புச்சளி, காய்ச்சல் இருமல் போன்ற தொற்றுக்கள்.  

குளிர்

மார்பில் சளி சேர்ந்தால், குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல், இறுக்கம் ஏற்பட்டு தூக்கம் கூட சரியாக வராது. இதனால் அவர்கள் எரிச்சலுடனும் சோர்வுடனும் காணப்படுவார்கள். தொடர்ந்து மார்புச்சளி பிரச்சனை நீடித்தால், குழந்தைகளின் அன்றாட இயல்பு வாழ்க்கையே பாதிக்கப்படும்.

இருமல்

இதனைத் தவிர்க்க, குழந்தைகளை எப்போதும் கதகதப்பான உடைகளையே அணிவிக்க வேண்டும்.  குளிர்ந்த உணவுகள் மற்றும் குளிர்ந்த நீரை தவிர்க்க வேண்டியது அவசியமாகிறது.  மேலும், திரவ உணவுகள், நோய் எதிர்ப்புச் சக்தியை உயர்த்தும் பழங்கள், காய்கறிகள் உணவில் சேர்க்க வேண்டும். மருத்துவர் ஆலோசனையுடன் ஆவி பிடித்தல், ஈரப்பதமூட்டி பயன்படுத்துதல் போன்றவை நல்ல நிவாரணங்களை தரவல்லவை. நாம் அவர்களுக்கு கொடுக்கும் மிகச் சிறிய கவனமே, குளிர்காலத்தில் குழந்தைகளைக் மார்பு சளி, இருமல் காய்ச்சலிலிருந்து பாதுகாக்க உதவும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!