இரவில் கண்விழித்து படித்த மகனைக் கண்டித்த பெற்றோர்... 9வது மாடியில் இருந்து குதித்து 12ம் வகுப்பு மாணவர் தற்கொலை!

 
குதித்து தற்கொலை

சென்னை வானகரத்தில், இரவு நேரத்தில் அதிக நேரம் கண்விழித்துப் படிப்பதை பெற்றோர் கண்டித்ததால், மனமுடைந்த பிளஸ்-2 மாணவர் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பின் 9-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் மாணவர்கள் தீவிரமாகப் படித்து வருகின்றனர். இந்தச் சூழலில் ஏற்பட்ட இச்சம்பவம் பெற்றோர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வானகரம் பகுதியைச் சேர்ந்த எபிபாத் - ராஜேஸ்வரி தம்பதியின் மகன் சஷ்வத் (17). ராஜேஸ்வரி அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். சஷ்வத் தனது தாய் பணியாற்றும் அதே பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர்கள் அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 9-வது தளத்தில் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு, சஷ்வத் தனது அறையில் தீவிரமாகப் படித்துக் கொண்டிருந்தார். நள்ளிரவு நேரமானதால், அவரது உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு, "படித்தது போதும், இப்போது தூங்கச் செல்" என்று பெற்றோர் அறிவுறுத்தியுள்ளனர்.

பள்ளி மானவி தற்கொலை

பெற்றோர் கூறியதைக் கேட்டுச் சஷ்வத் தனது அறைக்குச் சென்ற சிறிது நேரத்தில், குடியிருப்பின் கீழே ஏதோ பலமான சத்தம் கேட்டுள்ளது. உடனே குடியிருப்பு வாசிகள் அங்கு ஓடிச் சென்று பார்த்தபோது, சிறுவன் ஒருவன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். சத்தம் கேட்டு ஓடி வந்த எபிபாத் மற்றும் ராஜேஸ்வரி, ரத்தக் காயங்களுடன் கிடப்பது தங்களது மகன் சஷ்வத் தான் என்பதை அறிந்து உறைந்து போயினர். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், சஷ்வத் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

கொலை தற்கொலை வெட்டி மரணம் விபத்து

தகவலறிந்து வந்த வானகரம் போலீசார், சஷ்வத்தின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், தேர்வுக்குத் தயாராவதற்காக இரவு முழுவதும் விழித்திருப்பதை அவரது பெற்றோர் தடுத்ததே அவர் இத்தகைய விபரீத முடிவை எடுக்கக் காரணமாக இருந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. வீட்டின் பால்கனி வழியாக அவர் கீழே குதித்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்தத் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். தேர்வின் அழுத்தமும், பெற்றோரின் சிறிய கண்டிப்பும் ஒரு இளம் உயிரைப் பறித்துள்ள இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!