கதறிய பெற்றோர்... கல்வி சுற்றுலாவில் 8ம் வகுப்பு மாணவன் மயங்கி சரிந்து பலி!

மகாராஷ்டிரா மாநிலம் கன்சோலியில் நவி மும்பை மாநகராட்சி பள்ளியில் படித்து வருபவர் ஆயுஷ் தர்மேந்திரா சிங்.14 வயதாகும் இவர் 8ம் வகுப்பு படித்து வந்தார். இவர் ராய்காட் மாவட்டம் கோபோழலியில் உள்ள இமாஜிகா தீம் பார்க்கிற்கு சக மாணவர்களுடன் கல்வி சுற்றுலா சென்றிருந்தார். பயணத்தில் அசௌகரியமாக இருந்ததால் தர்மேந்திரா சிங் பெஞ்சில் அமர்ந்திருந்தார். அப்போது தர்மேந்திரா சிங் திடீரென தரையில் மயங்கி விழுந்தார்.
அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் தர்மேந்திரா சிங்கை மீட்டு ஆரம்ப சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி செய்யப்பட்டு பின் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் . அப்போது தர்மேந்திரா சிங்கை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து பிரேத பரிசோதனை அறிக்கையில் தர்மேந்திர சிங் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாரடைப்பால் மாணவர் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!