சென்னை, கோவையில் செல்லப்பிராணிகள் பூங்கா… அரசு புதிய திட்டம்!

 
park

சென்னை மற்றும் கோவை நகரங்களில் தனியார் பங்களிப்புடன் செல்லப்பிராணிகள் பூங்கா அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பாதுகாப்பான முறையில் செல்லப்பிராணிகளை வளர்ப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் செல்லப்பிராணி பராமரிப்பு குறித்து மக்கள் அறிவு பெறுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செம... ரோலர் கோஸ்டர், மோனோ ரயில் உட்பட  சென்னையில்  பிரம்மாண்ட வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா!  

இந்த திட்டத்தை செயல்படுத்த முன்அனுபவம் கொண்ட தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. செல்லப்பிராணிகள் பராமரிப்பு மற்றும் நலன் குறித்து அனுபவம் உள்ள அமைப்புகள் இதில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு கப்பன் பூங்கா

விண்ணப்பப் படிவம் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை tnawb.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தமிழ்நாடு விலங்குகள் நலவாரிய அலுவலக முகவரிக்கு பிப்ரவரி 26ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!