ஜப்பானில் நாடாளுமன்றம் கலைப்பு... பிப்ரவரி 8ல் பொதுத் தேர்தல்!

 
ஜப்பான்

ஜப்பானின் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியில் முன்னாள் பிரதமர் ஷிகெரு இஷிபாவுக்கு எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து கடந்த செப்டம்பரில் அவர் பதவி விலகினார். இதையடுத்து, கூட்டணியில் இருந்த கௌ மேட்டோ கட்சி ஆதரவை திரும்பப் பெற்றது. இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் லிபரல் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையை இழந்தது.

பின்னர் ஜப்பான் இன்னோவேஷன் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்பட்ட நிலையில், சனே தகாய்ச்சி கடந்தாண்டு அக்டோபரில் ஜப்பானின் முதல் பெண் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், இன்று நாடாளுமன்றத்தின் வழக்கமான கூட்டத்தொடர் தொடங்கியபோது, 465 உறுப்பினர்களைக் கொண்ட கீழவையை கலைப்பதாக அவர் அறிவித்தார்.

தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் 2028 வரை இருந்தாலும், மக்களின் நேரடி ஆதரவைப் பெற வேண்டிய அவசியம் இருப்பதாக தகாய்ச்சி தெரிவித்தார். இதன் அடிப்படையில், வரும் பிப்ரவரி 8ஆம் தேதி ஜப்பானில் பொதுத் தேர்தல் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!