அணுசக்தியில் புதிய யுகம்… நாடாளுமன்றத்தில் ‘ஷாந்தி’ மசோதா நிறைவேற்றம்!

 
parliment
 

இந்திய உருமாற்றத்திற்காக அணுசக்தியை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் பயன்படுத்தும் நோக்கில் ‘ஷாந்தி’ மசோதா நாடாளுமன்ற மேலவையில் இன்று நிறைவேறியது. இதுகுறித்து பேசிய மத்திய அறிவியல் துறை அமைச்சர் ஜிதேந்திரா சிங், நாட்டின் மொத்த எரிசக்தி தேவையில் தற்போது 10 சதவீதம் அணுசக்தி மூலம் பூர்த்தி செய்யப்படுவதாக தெரிவித்தார். 2032-க்குள் 22 ஜிகா வாட், 2047-க்குள் 100 ஜிகா வாட் அணுசக்தி உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

நாடாளுமன்றம் பாராளுமன்றம்

இந்த மசோதா நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று மாநிலங்களவையிலும் ஒப்புதல் பெற்றது. மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இது தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து என குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன. இருப்பினும் விவாதங்களுக்கு பிறகு இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது.

பாராளுமன்றம்

இதையடுத்து மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட உள்ளது. அவர் ஒப்புதல் வழங்கினால், 1962 அணுசக்தி சட்டம் மற்றும் 2010 குடிமக்கள் பொறுப்பு சட்டங்களுக்கு மாற்றாக இந்த புதிய சட்டம் அமலுக்கு வரும். அணுசக்தித் துறையில் தனியார் பங்களிப்புக்கும் வழி திறக்கும் இந்த மசோதா, 80 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் மிகப் பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!