கறிக்காக கட்சித்தொண்டர்கள் அடிதடி !! அண்டாவோடு ஓட்டம் பிடித்த ஸ்பெஷல் குரூப்!!

 
பாரதிய ராஷ்டிரிய சமிதி

தெலுங்கானா மாநிலத்தில் சிரோலு பகுதியில், மாநிலத்தை ஆளும் கட்சியான பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பிறகு தொண்டர்களுக்காக கட்சியின் தலைமை சார்பில் கறி விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த கூட்டத்துக்கு எதிர்பார்த்ததை விட அதிகளவில் தொண்டர்கள் குவிந்தனர்.

பாரதிய ராஷ்டிரிய சமிதி

தொடக்கத்தில் முறையாக உணவு பரிமாறப்பட்ட நிலையில், ஒருகட்டத்தில் பலருக்கு சாப்பாடு கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதனால், பலரும் சாப்பாட்டிற்காகவும், கறிக்காகவும் மோதலில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் ஒரு சில தொண்டர்கள் கறி கிடைக்காது என்று முடிவு செய்து, அதற்கு தனியாக ஒரு திட்டம் போட்டனர். அதன்படி தொண்டர்கள் சிலர் ஒரு குழுவாக சேர்ந்து, கறிக் குழம்பு இருந்த அண்டாவை அங்கிருந்து தனியாக தூக்கிச் சென்றனர். அதனை பறிக்க வந்தவர்களை தடுக்க அண்டாவை சுற்றியும் பாதுகாப்புடன் தூக்கியும், இழுத்தும் அண்டாவை கடத்திச்சென்றனர். 

பாரதிய ராஷ்டிரிய சமிதி

தொடர்ந்து கூட்டத்தில் கறிக்காக தொண்டர்கள் சண்டையிட்டுக் கொண்டதால் பாதுகாப்பிற்கு வந்த போலீசார் பெரும் போராட்டத்துக்கு பிறகு கூட்டத்தைக் கலைத்தனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web