ஓடும் பேருந்தில் பயணி தூக்கிட்டு தற்கொலை... பெரும் பரபரப்பு!
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து திருச்சி நோக்கி 22 பயணிகளுடன் அரசு பேருந்து சென்றுகொண்டிருந்தது. ஓட்டுனர் ராமச்சந்திரன், நடத்துனர் செந்தமிழ் செல்வன் பணியில் இருந்தனர். நள்ளிரவில் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பேருந்தில் ஏறி பின்புற இருக்கையில் அமர்ந்துள்ளார்.

பேருந்து திண்டுக்கல் நோக்கி சென்றுகொண்டிருந்த போது ரெட்டியார்சத்திரம் அருகே அதிகாலை ஒரு மணி அளவில் அந்த நபர் தாம் கொண்டுவந்த வேஷ்டியை பயன்படுத்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதைக் கவனித்த மற்றொரு பயணி உடனடியாக ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு தகவல் தெரிவித்தார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரெட்டியார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த நபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
