ரயிலில் இருந்து குதித்த பயணி...டிக்கெட் பரிசோதிக்க வந்த போது விபரீதம்!

 
ரயில்
 

சென்னை – கும்மிடிப்பூண்டி மின்சார ரயிலில் நேற்று காலை பரபரப்பு சம்பவம் நடந்தது. சென்னை இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற ரயில், மீஞ்சூர் அருகே நந்தியம்பாக்கம் நிலையத்தில் நின்றது. அப்போது டிக்கெட் பரிசோதகர்கள் குழு ரயிலில் ஏறினர். முதல் வகுப்பு பெட்டியில் பயணச்சீட்டுகளை சரிபார்த்த போது ஒருவர் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தது தெரிய வந்தது.

அவரிடம் அபராதம் வசூலிக்க முயன்ற போது அவர் மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ரயில் அத்திப்பட்டு நிலையத்தை அடைந்தபோது அந்த நபர் ரயிலில் இருந்து குதித்து காயமடைந்தார். தகவல் அறிந்த எண்ணூர் ரயில்வே பாதுகாப்பு படையினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவத்தை பார்த்த சில பயணிகள் டிக்கெட் பரிசோதகர்கள் அந்த நபரை தள்ளிவிட்டதாக தவறாக எண்ணினர். இதனால் அவர்கள் டிக்கெட் பரிசோதகர்களை தாக்க முயன்றனர். பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் ரவி உடனடியாக அவர்களை முன்பதிவு அலுவலகத்திற்கு அழைத்து சென்று பாதுகாத்தார். பின்னர் சிலர் அலுவலகத்துக்குள் நுழைந்து குழப்பம் ஏற்படுத்தினர். சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!