பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து!

குஜராத் விமான விபத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து இன்னமும் மீளாத நிலையில் தலைநகர் டெல்லியில் நிஜாமுதீனில் இருந்து காஜியாபாத் நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் தடம் புரண்டதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பயணிகள் ரயிலின் நான்காவது பெட்டி திடீரென தடம் புரண்டு விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என வடக்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ரயில் விபத்து காரணமாக அப்பகுதி வழியாக செல்லும் பல ரயில்கள் தாமதமானதோடு, சில ரயில்கள் மாற்று பாதையில் இயக்கப்பட்டன.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ரயில்வே ஊழியர்கள், மற்றும் தொழில்நுட்ப குழுவினர், கிரேன் உபகரணங்களுடன் சம்பவ இடத்தை வந்தடைந்தனர். தற்காலிகமாக பாதிக்கப்பட்ட பெட்டியை மீட்டெடுத்ததும், ரயில் சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!