பயணிகள் உற்சாகம்... மே 15 முதல் இந்த ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம் !

 
ரயில் எக்ஸ்பிரஸ்
தெற்கு ரயில்வே மக்களின் வசதி மற்றும் தேவைகளின் அடிப்படையிலும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும் சில ரயில்களில் கூடுதல் நிறுத்தம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

இது குறித்து வெளியான செய்திக்குறிப்பில்   சென்னை- காரைக்குடி (பல்லவன்), தூத்துக்குடி- பாலக்காடு (பாலருவி) ரயில்களுக்கு கூடுதல் ரயில் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை - காரைக்குடி- சென்னை (12605, 12606) பல்லவன் விரைவு ரயில் பென்னடம் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும். 

ரயில் தண்டவாளம் நடைமேடை ப்ளாட்ஃபாரம்

அதே நேரத்தில், தூத்துக்குடி- பாலக்காடு- தூத்துக்குடி (16791, 16792) பாலருவி விரைவு ரயில் கள்ளிடைக்குறிச்சி ரயில் நிலையத்திலும் தலா ஒரு நிமிடம் இரு மாா்க்கங்களிலும் நின்று செல்லும் எனத் தெரிவித்துள்ளது. இந்த கூடுதல் நிறுத்த சேவை மே 15 முதல் சோதனை அடிப்படையில்  செயல்பாட்டுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது