பயணிகள் கடும் அவதி... மின்சார ரயிலில் திடீர் புகை... நடுவழியில் நிறுத்தப்பட்ட ரயில்கள்!
தலைநகர் சென்னையின் பொது போக்குவரத்து சேவைகளில் குறிப்பிடத்தக்கவை மின்சார ரயில்கள் . இவைதான் புறநகர் பகுதிகளிலிருந்து கல்வி மற்றும் பணிக்காக வருபவர்களை சென்னைக்கு விரைவாக கொண்டு வந்து சேர்ப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

அந்த வகையில் தாம்பரம் , சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் லட்சக்கணக்கான மக்கள் இதில் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை தாம்பரம் - கடற்கரை மின்சார ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் ரெயில்கள் தாமதமாக வந்தன.

கடற்கரையில் இருந்து தாம்பரம் சென்ற மின்சார ரயிலில் 6வது பெட்டியில் புகை வந்ததால் பல்லாவரத்தில் ரயில் நிறுத்தப்பட்டது. இதனால் அந்த வழித்தடத்தில் சென்ற ரயில்கள் அனைத்தும் சற்று நேரம் நிறுத்தி வைக்கப்பட்டன. பின்னர் நீண்ட தாமதத்திற்குப்பின் ரயில் சேவை தொடங்கியது. ரயில்கள் தாமதமாக வந்ததால் அலுவலகம் செல்பவர்கள் உட்பட் பல்வேறு தரப்பு பயணிகளும் கடும் அவதியடைந்தனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
