விமான பயணிகள் அதிர்ச்சி.. 3 மடங்கு உயர்ந்த கட்டணம்...!
தமிழகத்தில் மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு இன்று பல பகுதிகளில் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் விமான கட்டணம் மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. பொதுவாக மதுரையிலிருந்து சென்னைக்கு வர ரூ. 4542 ஆக இருந்த விமான கட்டணம் ரூ.18,127 ஆக உயர்ந்துள்ளது.

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வர ரூ. 4214 ஆக இருந்த விமான கட்டணம் தற்போது ரூ. 17401 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோன்று திருச்சியில் இருந்து சென்னைக்கு வர ரூ. 2334 ஆக இருந்த விமான கட்டணம் தற்போது ரூ. 9,164 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கோவையிலிருந்து சென்னைக்கு வர ரூ. 3550 ஆக இருந்த விமான கட்டணம் தற்போது ரூ. 6475 ஆக உயர்ந்துள்ளது. இதனால் விமானப் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
