அட... வரிசையில் நின்று ரயிலில் ஏறிய பயணிகள்... வைரல் வீடியோ!
மும்பை மாநகரின் மின்சார ரயில்களில் பெரும் கூட்ட நெரிசல், முண்டியடித்தல் உலகறிந்தது. ஆனால் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகிய வீடியோ ஒன்று மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ரயில் நிலைய நடைமேடையில் பயணிகள் மிகவும் பொறுமையாக வரிசையில் நின்று முதல் வகுப்பு பெட்டியில் ஏறுவது தெளிவாகக் காணப்படுகிறது.
இவ்வளவு நேர்த்தியாக வரிசை முறையை பின்பற்றுவது மும்பைவாசிகளிடம் அரிது. பலர் இது உண்மையான வீடியோவா, இல்லையெனில் செயற்கை நுண்ணறிவு உருவாக்கவோ என்று கேள்வி எழுப்பியுள்ளனர். குறிப்பாக, முதல் வகுப்பு பயணிகளே இதுபோன்ற ஒழுக்கத்தை பின்பற்றுவதாகவும், சாதாரண பெட்டிகளில் இது சாத்தியமில்லை என்றும் விவாதங்கள் எழுந்துள்ளன.
இந்த ஒழுக்கமான நடத்தை பொதுமக்களுக்கு முன்மாதிரி என பாராட்டப்படுகிறது. நெரிசலான நகரத்தில் இதுபோன்ற கட்டுப்பாடு மற்றவர்களுக்கும் ஒரு புதிய நம்பிக்கையை தரும் என்று மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
