விமான பயணிகளே செக் பண்ணிக்கோங்க... ஜூன் 1 முதல் சென்னை விமான நிலையத்தில் அதிரடி மாற்றங்கள்!
தமிழகத்தில் 24 மணி நேரமும் பரபரப்பாக செயல்பட்டு வரும் விமான நிலையம் சென்னை விமான நிலையம். இங்கு ஜூன் 1 முதல் விமான நிலைய ஆணையம் (AAI), சிறிய விமானங்களின் புறப்பாட்டை T1-லிருந்து T4-க்கு மாற்ற திட்டமிட்டு வருகிறது. அந்த வகையில் Indigo நிறுவனம் சென்னையில் இருந்து தினமும் சுமார் 32 ATR விமானங்களை இயக்கி வருகிறது. இந்த விமானங்கள் 72 பயணிகளை வரை ஏற்றிச் செல்லும் சிறிய ரக விமானங்கள்.
சென்னை விமான நிலையத்தில், விமானங்களை நிறுத்தும் இடங்களை மேம்படுத்தும் பணி நடக்க இருக்கிறது. இதற்காக, T1 டெர்மினலில் 6 பார்க்கிங் இடங்களை மூட உள்ளனர். இதனால், ATR விமானங்கள் T4 டெர்மினலுக்கு மாற்றப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது, Air India மற்றும் Air India Express விமானங்கள் T4-ஐ பயன்படுத்தி வருகின்றன.

இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் Taxiway H-ஐ வலுப்படுத்தும் பணி ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடக்கும். இதனால் ஏற்படும் இடையூறுகளை குறைக்கவே, சிறிய ரக விமானங்களின் புறப்பாடு T4-க்கு மாற்றப்படுகிறது" என விளக்கம் அளித்துள்ளனர்.
விமானப் போக்குவரத்தை மேம்படுத்தவும், தாமதத்தை குறைக்கவும் இந்திய விமான நிலைய ஆணையம் சில மாற்றங்களை செய்துள்ளது. Taxiway F என்ற பாதையை சீரமைத்துள்ளனர். இந்த பாதையால் விமானம் ஓடுபாதையில் இருந்து வேகமாக வெளியேற உதவும். இதனால், மற்ற விமானங்கள் எளிதாக வந்து செல்ல முடியும்.

புதியதாக Taxiway A என்ற பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விமானங்களை வரிசையில் நிறுத்தி, போக்குவரத்தை கட்டுப்படுத்த உதவும். சரக்கு கையாளும் திறனை அதிகரிக்க, சரக்கு முனையங்கள் 7, 8, மற்றும் 9 ஆகியவற்றை விரிவாக்கம் செய்துள்ளனர். "இந்த முனையங்களின் புதிய அமைப்பு, விமானங்கள் எளிதாக வெளியேற உதவும்" என அதிகாரி கூறியுள்ளார்.
இண்டிகோ நிறுவனம் தனது முக்கிய உள்நாட்டு விமானங்களை T1 டெர்மினலில் இருந்து இயக்கி வருகிறது. ஆனால், சிறிய ரக விமானங்கள் மட்டும் T4-க்கு மாற்றப்பட்டுள்ளன. எனவே, பயணிகள் தங்கள் விமானம் எந்த டெர்மினலில் இருந்து புறப்படுகிறது என்பதை உறுதி செய்து கொள்ளும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
