வைரல் வீடியோ!! ஏலேலோ ஐலசா..!! ரயிலை கீழே இறங்கி தள்ளிய பயணிகள்!!

 
ரயிலை தள்ளிய ஊழியர்கள்

மேற்குவங்க மாநிலத்தில்  ஹவுராவிலிருந்து தெலங்கானா மாநிலத்தில் உள்ள செகந்திராபாத் இடையே தினமும் ஃபலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்  ஜூலை 7ம் தேதி வழக்கம் போல் ஹவுராவில் இருந்து செகந்திராபாத் நோக்கி புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. தெலங்கானா மாநிலம் பொம்மைபள்ளி மற்றும் பகிடிபள்ளி இடையே ரயில் வந்து கொண்டு இருந்த போது திடீரென ரயிலில் தீப்பிடித்தது.அந்த ரயிலின் எஸ்2 முதல் எஸ்6 வரயிலான பெட்டிகளில் தீ பிடித்து திகுதிகுவென எரிய தொடங்கியது. கொளுந்து விட்டு எரிந்த தீயை பாத்ததும் பயணிகள் பீதியில் அலறினர்.


 

உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ரயில் நிறுத்தப்பட்டது. பயணிகள் எமெஜென்சி டோர் வழியாகவும் குதித்து தப்பினர். தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மின்கசிவு காரணமாக இந்த திடீர்  தீவிபத்து ஏற்பட்டது.  
பழுதாகி நிற்கும் பேருந்தை போல ரயிலை போலீசாருடன் இணைந்து பலர் தள்ளி செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் இது குறித்த விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், ரயில்வே அதிகாரிகள் வட்டாரத்தில் ஃபலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீப்பிடித்ததும் உடனடியாக  ரயில் நிறுத்தப்பட்டு விட்டது.  

ரயிலை தள்ளிய ஊழியர்கள்

கொளுந்து விட்டு எரிந்த தீ பிற பெட்டிகளுக்கும் பரவாமல் தடுக்க  ரயில்வே ஊழியர்கள் மற்றும் பயணிகள் சேர்ந்து தள்ளினர். எஸ்1 மற்றும் எஸ்2 பெட்டிகள், ஒரு பொதுப்பெட்டி ஆகியவை ரயிலின் பின்பக்கத்தில் இருந்தன. இந்த பெட்டிகளில் தீ பரவாமல் இருக்க ரயில்வே ஊழியர்கள் மற்றும் உள்ளூர் போலீசாரால் தள்ளி செல்லப்பட்டதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.உரிய நேரத்தில் ரயிலை தள்ளி சென்றதால் பிற பெட்டிகளுக்கும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. ரயில்வே என்ஜின் வரும் வரை காத்திருந்தால் பிற பெட்டிகளுக்கும் தீ பரவி விடும் என்பதால் ரயில்வே போலீசாரும் அதிகாரிகளும் ரயில் பெட்டிகளை கைகளாலே தள்ளி சென்று பெரும் அசம்பாவிதம் நேரிடாமல் தடுத்துள்ளனர். ரயில்வே ஊழியர்களின் இந்த செயலை நெட்டிசன்கள் பலரும் பாரட்டியும் வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web