பொறுமை கடலினும் பெரிது... எம்.பி., சீட் குறித்து பிரேமலதா பேட்டி!

 
பிரேமலதா
 

பொறுமை கடலினும் பெரிது. இப்பொது தான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது, பொறுத்திருந்து பார்ப்போம் என்று மாநிலங்களவை உறுப்பினர் பதவி குறித்து தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

பிரேமலதா

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லிப் பயணம் மக்களுக்கு நல்லது நடந்தால் சரி, இருந்தாலும் அவர் பயணம் குறித்து அவர் தான் விளக்கம் அளிக்க வேண்டும்.

அமலாக்கத்துறையைப் பொறுத்தவரை சோதனை நடக்கிறது என்றால், அதன் பின்னர் என்ன நடவடிக்கை எடுக்கின்றனர் என்பதை அவர்கள் விளக்க வேண்டும். இதில் மக்களுக்கு தெளிவான பார்வை இருக்கிறது” என்றார்.

பிரேமலதா

மாநிலங்களவை சீட் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், "பொறுமைக் கடலினும் பெரிது, தற்போதுதான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.பொறுத்து இருந்து பார்ப்போம், அடுத்த தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக ஜனவரி மாதம் கடலூரில் நடைபெறும் மாநாட்டில் அறிவிப்போம்" எனத் தெரிவித்தார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது