மருத்துவமனை ஊழியர்கள் அலட்சியம்... உயிருடன் இருந்த நோயாளி இறந்ததாக சான்றிதழ்!

 
மருத்துவமனை

கான்பூர் லாலா லஜ்பத் ராய் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருநோயாளி உயிருடன் இருக்கும்போதுதான், அவர் இறந்துவிட்டதாக தவறான சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தவறை அறிந்த முறைப்படி பிரேதப் பரிசோதனைக்கு வந்த காவலர்கள், நோயாளி சுவாசிப்பதை கண்டுகொண்ட போது அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

சம்பவம் வெளிப்படையதும், மருத்துவமனையில் பணியாற்றிய ஒரு பயிற்சி மருத்துவர், ஒரு செவிலியர் உள்ளிட்ட மூன்று பணியாளர்கள் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டனர். கணேஷ் சங்கர் வித்யார்த்தி மருத்துவக் கல்லூரி முதல்வர் சஞ்சய் கலா விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டார். மூன்று பேர் கொண்ட உயர்மட்டக் குழு நாற்பத்தெட்டு மணி நேரத்திற்குள் உண்மை நிலவரம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மருத்துவமனை நிர்வாகம், விசாரணை முடிவில் தவறு செய்தவர்களுக்கு மிகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளது. இது மருத்துவமனைகளில் கவனக்குறைவுக்கு கடுமையான எச்சரிக்கை செய்தி என பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!