பீதியில் நோயாளிகள்... அரசு மருத்துவமனையில் ஹாயாக உலாவரும் தெரு நாய்கள் !

தமிழகத்தின் பல பகுதிகளில் நாய்க்கடி சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. இதனால் பொது இடங்களுக்கு மக்கள் அச்சத்துடனே சென்று வர வேண்டியுள்ளது. அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நூறாண்டுகளுக்கும் மேலாக ராசா மிராசுதார் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துமனையில் மகப்பேறு சிகிச்சை, தாய் - சேய் நல பிரிவு, கண் சிகிச்சை பிரிவு, நாய்க்கடி சிகிச்சை பிரிவு உட்பட பல சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இங்கு மகப்பேறு சிகிச்சை பிரிவு சிறப்பாக செயல்பட்டு வருவதால், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர் மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். அதே போல் ஏராளமான உள்நோயாகளிகளும் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. பொதுமக்கள் நாய்களை விரட்டினால், அவை கடிக்க வருவதை அருகில் வந்து உறுமி செல்கின்றன. இதனால் பொதுமக்கள் நாய்களை பார்த்து அச்சத்துடனேயே வந்து செல்ல வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதனையடுத்து பொதுமக்களை அச்சுறுத்தும் தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!