தமிழகத்தில் புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்கப்படும்... வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

தமிழகம் முழுவதும் ஆட்சேபம் இல்லாத புறம்போக்கு நிலங்களில் வசித்து வருபவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பட்டா வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசு விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நீர் நிலை, மேய்ச்சல் நிலம், கோயில் நிலம் மற்றும் உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்கப்படாது. சென்னை பெருநகரப் பகுதியில் 10 ஆண்டுகளுக்கு மேல் வசிப்போருக்கு பட்டா வழங்கப்படும்.
மற்ற இடங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்போருக்கு பட்டா வழங்கப்படும். அதே போன்று 3 லட்சத்திற்கு குறைவான ஆண்டு வருமானம் உள்ள குடும்பங்களுக்கு இலவசமாக பட்டா வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் சுமார் 86,000 பேருக்கு அடுத்த 6 மாதங்களுக்குள் பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!